எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்று நடிகை கார்த்திகாவுக்கு, அவரது அம்மா ராதா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
"கோ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருப்பவர் நடிகை கார்த்திகா.
இந்நிலையில் தன் மகளுக்கு நடிகை ராதா சில அட்வைஸ்களை தெரிவித்திருக்கிறாராம். இதுபற்றி ராதா அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது.
அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள்.
படிப்பிலும் சுட்டி அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர், நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன்.


0 comments:
Post a Comment