ஜப்பானை தாக்கிய தலஸ் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர். மேலும் இம் மோசமான காலநிலையில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த சூறாவளியானது ஞாயிற்றுக்கிழமை தணிந்துள்ள போதிலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்ந்து நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment