Monday, October 31, 2011

2004/2006 கல்விமானி பட்டமளிப்பு எப்போது?


2004/2006ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்விமானி பட்டம் பெற்று வெளியேறிய ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா இதுவரை நடைபெறவில்லையென அந்த ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றர். இதுபற்றிக் கூறப்படுவதாவது. பட்டத்திற்கான சான்றிதழ் கடந்த 2008இல் கிடைத்ததன் பின்னர் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக தன்னை உயர்த்திக்கொண்டனர்.

ஆனாலும் இந்த ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா இதுவரை நடைபெறாதது மிகுந்த கவலையை அளித்திருப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர். நாட்டின் கல்விக் கொள்கைளை வெளியிடுகின்ற, கல்விசம்பந்தமான ஆலோசனைகளை அமைச்சுக்கு வழங்குகின்ற இந்த நிறுவனம் நாட்டின் கல்விக்கு காவலனாய் இருந்து பல சேவைகளை ஆற்றிவருகின்றது. ஆனால் இவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிருவனத்தின் இச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கல்விமானிப் பட்டத்தை மேற்கொள்ள இருக்கின்ற ஆசிரியர்களுக்கும் மனக்கிலேசத்தை உண்டுபண்ணும் எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே விரைவில் இப்பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment