பிரெஞ்ச் ஓபன் பட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் வெற்றி பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், நெதர்லாந்தின் ஜிய் யோவை எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய செய்னா 21-14, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சேட்டன் ஆனந்த், பிரான்சின் பிரைஸ் லவர்டசை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை பிரான்ஸ் வீரர் 21-13 எனக் கைப்பற்றினார். காயம் காரணமாக இரண்டாவது செட்டில் இருந்து சேட்டன் ஆனந்த் விலகினார். இதனால் பிரைஸ் லவர்டஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திஜு, ஜுவாலா கட்டா ஜோடி 16-21, 8-21 என்ற நேர் செட்டில் இந்தோனேசியாவின் டான்டோவி அகமது, லிலியானா நாட்சிர் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

0 comments:
Post a Comment