Friday, October 28, 2011

கிழக்கு மீண்டும் வெள்ளத்தில் மூழ்குமா?


தற்போது நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொடர் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்ற மழை காலத்தில் கிழக்கு மாகாணம் வெள்ளத்தில் மூல்கியிருந்ததை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுபோல தற்போதும் தொடர் மழையினால் மீண்டும் கிழக்கு மாகாணம் வெள்ளத்தில் மூழ்குமா என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. காரணம், சென்ற வெள்ளத்துக்காக வெட்டப்பட்ட வடிகான்கள், வீதிகள், குளக்கட்டுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

புனரமைத்த வீதி குழாய்நீர் பெறுவதற்காக வெட்டப்பட்டு பூர்த்தியாகாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் செல்வதும் பெரும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் மழையும் வந்துள்ளதால் மக்கள் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டுவரும் அரசியல்வாதிகளும் இதைக் கண்டு கொள்வதாயில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர் 

0 comments:

Post a Comment