எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் புதிதாகப் பதிவுசெய்யப்படும் ஆங்கில இலக்கமுள்ள பஸ். லொறி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி கட்டாயமாக அணியப்படவேண்டுமென பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் கே. அரசரத்திணம் தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டத்தைப் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதற்தடவையாக 1000 ரூபா அபராதம் செலுத்தவேண்டும். இரண்டாவது முறையாகவும் பிடிப்பட்டால் 2000 ரூபா செலுத்தவேண்டும். சென்ற வருட இறுதியில் மாத்திரம் 38 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரைவாசி மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளுமாகும். தினமும் 600க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:
Post a Comment