ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரும் மனுமீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருணை மனு நிராகரித்துவிட்ட பின்னர் தூக்கில் போடுவதுதான் சரியான முறை என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். மத்திய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை நவம்பர் 29 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், பாரிய பிரச்சினைகளுக்கு அரசு முகம் கொடுக்கவேண்டி வருமென நம்பப்படுகிறது.

0 comments:
Post a Comment