பாரிய ஊழல் மோசடி களினால் பெரும்பாலான அரச நிறுவனங்கள் பாரிய அளவில் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் மாத்திரம் 106 அரச நிறுவனங்களில் 6193 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், அரசாங்கம் கடந்த 10 மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து 519 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளது. இன்று நாடு பாரிய கடன் சிக்கலில் பொருளாதார வீழ்ச்சியை நோக்கியுமே பயணித்துக் கொண்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment