ரா-1 படத்தை தொடர்ந்து, ஷாரூக்கானின் டான்-2வும் தமிழில் ரிலீஸாக இருக்கிறது. கடந்த தீபாவளிக்கு இந்தியில் தான் நடித்த ரா-1 படத்தை தமிழில் வெளியிட்டார் ஷாரூக்கான். அதேநாளில் வேலாயுதம், ஏழாம் அறிவு ஆகிய படங்களும் வெளியாகின. என்றாலும் ரஜினி அந்த படத்தில் சூப்பர்மேன் வேடத்தில் நடிக்கிறார் என்றொரு செய்தியை முன்பே வெளியிட்டு பப்ளிசிட்டியை தேடிக்கொண்டார் ஷாரூக்கான. இதனால் அப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டதோடு கனிசமான வெற்றியும் பெற்றது.
அதன் காரணமாக, மீண்டும் இந்தியில் தான் நடித்துள்ள டான்-2 என்ற படத்தை வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் ரிலீஸ் செய்கிறார் ஷாரூக்கான். கிறிஸ்மஸ் தினத்தில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்பதால் அன்றைய தினத்தில் வெளியாகும் ஒரே புதிய படம் டான்-2 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படமும் ரா-1 அளவுக்கு, வசூல் சாதனை புரியும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment