உலகின் சக்தி வாய்ந்தவர்கள பட்டியலில் அமெரி்க்க அதிபர் ஒபாமா இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா 11ஆவது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19ஆவது இடத்திலும் உள்ளனர். உலகின் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் என பலத்தரப்பினரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் 2ஆவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜின்டாவ் 3ஆவது இடத்திலும் உள்ளனர். 5ஆவது இடத்தில் மைக்ரோ சொப்ட் தலைவர் பில்கேட்ஸ், 6ஆவது இடத்தில் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ், 7ஆவது இடத்தில் போப் 16ஆம் பெனடிக்ட் ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 35ஆவது இடத்திலும், ஸ்டீல் அதிபர் லஷ்மி மிட்டல் 47ஆவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் தாதா ஜோக்கின் ஜூமான் லோரா 55ஆவது இடத்திலும், மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் 57ஆவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment