Sunday, November 27, 2011

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 3 நாள் பயிற்சிநெறி


(றிஸான் முகம்மட்) 
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகம், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகம் என்பவற்றின் இணை அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான 3 நாள் பயிற்சிநெறி அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

‘கமநெகும’ வேலைத்திட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறியில் அக்கரைப்பற்றுப் பிரதேச முன்பள்ளி பாடசாலைகளில் கடமையாற்றும் சுமார் 40 ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பயிற்சிநெறி ஆரம்பம் மற்றும் இறுதிநாள் நிகழ்வுகளில், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அஹமட் கியாஸ், பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல். இப்றாஹிம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எம். முஸ்தபா, உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். லாபீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

பயிற்சி நெறியில் கலந்துகொண்ட ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பணியின்போது அவர்கள் எதிர்கொள்ளும் குறைகள், பிரச்சினைகள் கேட்டறியப்பட்டன. பயிற்சிநெறி ஒருங்கிணைப்பாளராக முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம். மாஹிர் தொழிற்பட்டார்.




0 comments:

Post a Comment