Sunday, November 13, 2011

அரச வங்கிகளின் 4578 கோடி கடனுக்கு ஆப்பு


(பஹமுன அஸாம்)  
கடந்த வருடத்தில் அரசாங்க வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிக் கொடுக்காமல்விட்ட கடன்தொகை 4578 கோடி ரூபாய் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வங்கிக்கு 1264 கோடியும், மக்கள் வங்கிக்கு 1874 கோடியும், தேசிய சேமிப்பு வங்கிக்கு 211 கோடியும் கடன்தொகை திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது. ஏனைய தொகைகள் ஏனைய சிறுசிறு அரச வங்கிகளில் பெற்றுக்கொள்ப்பட்டதாகும்.

கடந்த வருடத்தில் அரச வங்கிகளில் வைப்பு செய்யப்பட்ட முழுத்தொகையானது 140 ஆயிரத்து 400  கோடியாகும். இதனை 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 வீத வளர்ச்சியைக் காட்டுகிறது.

0 comments:

Post a Comment