Tuesday, November 01, 2011

சிகிச்சைக்காக துமிந்த சிங்கப்பூர் பயணம்

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றுள்ளதாக உறவினர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 08 ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூராட்சித் தேர்தலின்போது கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒரு வாக்குமூலத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் துமிந்த சில்வாவின் உடல்நிலை தேறவில்லை.

பின்னிணைப்பு:
சிங்கப்பூரிலுள்ள பிரபல வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விசேட சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல வைத்திய நிபுணர்கள் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நேற்றிரவு 9. 35  மணிக்கு விடுவிக்கப்ட்ட துமிந்த சில்வாவை உடனடியாகவே சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது 20 வாகனங்கள் சென்றதுடன் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:

Post a Comment