நடிகை மம்தாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது, தனது உறவினர் பிரஜீத்தை மணக்கிறார். நடிகை மம்தா, பிரஜீத் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மணமகன் இல்லத்தில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மம்தாவுக்கு பிரஜீத் மோதிரம் அணிவித்தார்.
இது குறித்து மம்தா தாயார் கூறும்போது, மாப்பிள்ளை பெற்றோர் புதிய வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது என்றார். மம்தா, பிரஜீத் திருமணத்தை அடுத்த மாதம் டிசம்பர் 28ஆம் திகதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு மம்தா சினிமாதுறைக்கு வரமாட்டார் என்று தகவல்கள் கிடைத்தது.


0 comments:
Post a Comment