Wednesday, November 23, 2011

தனுஷின் 'கொலவெறி டி' பாடல் சாதனை


தனுஷ் பாடிய கொலவெறி டி பாடலை வெளியிட்ட 4 நாட்களில் 10 இலட்சம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக அனைத்துப் பாடல்களையும் தனுஷே பாடியுள்ளார்.

அதிலும் கொலவெறி டி என்ற பாடல் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்தப் பாடலை வெளியிட்ட நான்கே தினங்களில் 10 இலட்சம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். மும்பை உட்பட அனைத்து வானொலிகளிலும் கொலைவெறி டி பாடல் ஒலி பரப்பப்படுகிறது. பாடல் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் தனுஷும், படக்குழுவினரும் இருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment