மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்தில், வில்லனாக நடிக்க இருக்கிறார் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன். தமிழ் சினிமாவில் இப்போதும், தனது நடிப்பால் அசத்தி வருபவர் நடிகர் அர்ஜூன். இவர் கடைசியாக "மங்காத்தா" படத்தில் அஜித்துடன் சேர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். மங்காத்தாவில் அர்ஜூனின் நடிப்பு ஹொலிவுட் வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மணிரத்னம் அடுத்து, கார்த்திக் மகன் கவுதமை வைத்து இயக்க இருக்கும் "பூக்கடை" படத்தில் அர்ஜூனையும் நடிக்க வைக்க இருக்கிறார். ஆனால் படத்தில் அர்ஜூன் ஏற்றிருப்பது வில்லன் வேடமாம். மணிரத்னம் படத்தில் அர்ஜுன் நடிப்பது இதுவே முதல்முறை. இதுபற்றி அவர் கூறுகையில், அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்கிறார்.


0 comments:
Post a Comment