Wednesday, November 23, 2011

ஊடகவியலாளர்கள் குறித்த திரைப்படம்


புகழ்பெற்ற சிங்கள நாடக மற்றும் திரைப்பட நடிகரும், நெறியாளருமான லின்டன் சேமகே இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் குறித்த திரைப்படம் ஒன்றை வெளியிடத் தயாராக உள்ளார். 'ஜேடு' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் ஒருவருடைய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலில் வசித்துவரும் லின்டன் சேமகே அண்மையில் சில மாதங்களாக இத்திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி நெறியாள்கை செய்திருக்கிறார் லிண்டன் சேமகே. இதனைத் தயாரித்திருக்கிறார் அனுர கிரிபத்கல. இலங்கை அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக இது வெளிவரவிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு  ஆரம்பத்தில் இத்திரைப்படம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் திரையிடப்பட இருக்கிறது.

0 comments:

Post a Comment