காது மீழ் நடுகை சத்திர சிகிச்சைக்கான நிதியுதவி கோரல்
அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவில் வசிக்கும் எனது மூன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையான எம்.எப். அத்னான் என்பவர் கேள்விப்புலன் குறைபாட்டின் காரணமாக பேச முடியாதிருக்கிறார். இவரைப் பரிசோதித்த டாக்டர் திரு. தேவானந்தா (ENT Surgery) அவர்கள் இவருக்கு Cochlear implant Surgery மூலம் கேள்வித் திறனையும், பேச்சுத் திறனையும் ஏற்படுத்த முடியும் என ஆலோசனை கூறியுள்ளார். இச்சத்திர சிகிச்சைக்கும் அதற்குப் பொருத்தும் கருவிக்குமாக சுமார் 20–36இலட்சம் வரை செலவாகும் என வேண்டியுள்ளார். அதற்கான சகல அறிக்கைகளும் தந்துள்ளார். அத்தோடு இச்சத்திர சிகிச்சையினை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டுமெனவும் வேண்டியுள்ளார்.
எனவே, இந்நிலையில் இச்சத்திர சிகிச்சைக்கான பணத்தினை அரச சேவையில் சாதாரண ஆசிரியர் தொழிலை மேற்கொள்ளளும் என்னால் திரட்டிக் கொள்ள முடியாத நிலையில், இக்குழந்தையின் சிகிச்சைக்காக உதவிடுமாறு கருணை உள்ளம் கொண்ட உள்ளங்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
(இத்துடன் என் குழந்தையின் படம், சிகிச்சைக்கான வைத்தியரின் கடிதம், ஏனைய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நிதியுதவி செய்ய விரும்புவர்கள் பின்வரும் வங்க்க் கணக்கு வைப்பிலிடலாம்.
மக்கள் வங்கி, அட்டாளைச்சேனை கிளை
கணக்கு இலக்கம்: 228 2001 8000 6715
JM.விக்கிரமாராச்சி & Co
தொடர்புகளுக்கு: 0715898701
எம்.ஐ.எம். பௌஸ்,
253, அறபா வித்தியாலய வீதி,
அட்டாளைச்சேனை-10.
2011.10.30







0 comments:
Post a Comment