(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 26ஆம் திகதி அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையின்போது சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த 932 பேர்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் இன்று எமக்குத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சட்டவிரோதமாக எந்தவித பதிவுகளின்றி குடும்பம் நடத்திவந்த 20 குடும்பங்களுக்கு சட்டபூர்வமாக திருமணப் பதிவுகள் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இவற்றில் 11 குடும்பம் மல்வத்தை பிரதேசத்தை சேர்தவர்களாகவும், 9 குடும்பம் வீரமுனையை சேர்ந்தவர்களாகவும் காணப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அனுமதிப்பத்திரம் பெறப்படாத 2 சுடுகண் சொட் கண் துப்பாக்கிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 265 நபர்களுக்கு வைத்திய சேவையும், 295 நபர்களுக்கு மூக்குக் கண்ணாடி பரிசோதனை செய்யப்பட்டு 50 பேருக்கு உரிய ரககண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கான கண்ணாடிகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏனைய சேவைகளாக பிறப்பு, இறப்பு, திருமணப்பதிவுகள் பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள், மத்தியஸ்த்த சபையின் சேவைகளுமாக 350 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment