Monday, November 07, 2011

சாய்ந்தமருதில் மாபெரும் களியாட்ட விழா


சாய்ந்தமருது புதுக்குடியேற்றத் திட்டமான பொலிவேரியன் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11ஆம் திகதிவரை நடைபெறுமென்று ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இங்கு மக்கள் தங்களது பொழுது போக்குக்காக திரண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சஜிகலா சர்க்கஸ் குழுவினரின் சாகசங்களும், இந்தியாவைச் சேர்ந்த மித்ராவின் மாயஜால நிகழ்வுகளும் இங்கு பிரதானமாக இடம்பெறுகின்றன. அத்துடன் சிறுவர்களுக்கான நிகழ்சிகளும் இடம் நடைபெறுகின்றன. இங்கு அதிகளவில் முஸ்லிம் பெண்கள் நிகழ்ச்சியை கண்டு கழிக்க வருவதும் குறிப்பிடத்தக்கது.








கிழக்கிலிருந்து முஹம்மட் பிறவ்ஸ்

0 comments:

Post a Comment