தளபதி படத்தின் ஹிந்தி படப்பிடிப்பு 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மம்மூட்டி மற்றும் பலர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த படம் தளபதி. ரஜினி காந்திற்கு தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படம் தளபதி.
தற்பொழுது தளபதி படம் ஹிந்தியில் ரீமேக்காக இருக்கிறது. இந்தி உரிமையை இந்தி தயாரிப்பாளர் பரத் ஷா வாங்கி இருக்கிறார். மணிரத்னத்துடன் இணைந்து அலைபாயுதே படத்தின் இந்தி பதிப்பை தயாரித்தவர் பரத் ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி ஹிந்தி ரீமேக்கை PUJA JATINDER என்பவர் இயக்க இருக்கிறார். தளபதி படத்தில் நடிக்கக் கூடிய நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
வருகிற 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment