Thursday, November 17, 2011

சம்மாந்துறையில் பசுமை பிரதேச திட்டம்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
வளமான நாடு, வளமான தேசம் எனும் திட்டத்தின்கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் பசுமை பிரதேச பிரகடனத்தின் பிரகாரம் சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், நம்பிக்கையாளர் சபை, ஊர் மக்கள் ஆகியோர் இணைந்து பயன்தரும் ஆயிரம் மரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை மலையடி கிராமம் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், உதவி தவிசாளர் எம்.ஐ. கலீலுர் ரஹ்மான்,  மாவட்ட வனவிலங்கு அதிகாரி லலித்கமகே, வட்டார வனவிலங்கு அதிகாரி எம்.ஏ.ஜயா, பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.காதர், எம்.ரீ.கரீம்,  தலைமை சமூர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தி யோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment