Saturday, November 19, 2011

கடாபியின் மகன் கைதுசெய்யப்பட்டார்


படுகொலை செய்யப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கேர்ணல் கடாபியின் மகன் ஸையிப் அல் இஸ்லாம் அல்ஜீரிய நாட்டின் எல்லைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அல்-ஜெஸீரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லிபிய தலைநகர் திரிபோலியில் செய்தியாளர் சந்திப்பொன்றில் தளபதி பஷீர் ஜுமா தையீல்பா இச்செய்தியை தெரிவித்துள்ளார். அத்துடன், ஸையிப் அல் இஸ்லாம் சின்டான் நகருக்கு கொண்டு வரப்படுவார் எனவும் மேலும் தெரிவித்தார். 

39 வயதுடைய ஸையிப் அல் இஸ்லாம் முழுமையான தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட பின் லிபியா தொலைக்காட்சியில் காட்டப்பட்ட  ஸையிப் அல் இஸ்லாம்

0 comments:

Post a Comment