Tuesday, November 29, 2011

முன்னாள் அமைச்சரின் மறைவையிட்டு சம்மாந்துறையில் துக்கம் அனுஷ்டிப்பு


(ஏ.ஜே.எம். ஹனீபா) 
நேற்றிரவு மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களின் மறைவையிட்டு சம்மாந்துறை பிரதேசம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்றைய தினம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் பிரதேசமெங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் ஜனாஸாவை பார்வையிடுவதற்காக நாட்டின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தை நோக்கி வருகைதந்த வண்ணமுள்ளனர்.

அன்னாருடைய ஜனாஸா அவருடைய வன்னியனார் வளவிலுள்ள வீட்டிலிருந்து இன்று அதிகாலையில் சம்மாந்துறை அப்துல்மஜீட் நகர மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜனாசா இன்று அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை மஸ்ஜிதுல் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்க மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

0 comments:

Post a Comment