(ஜே. பிரோஸ்கான்)
கிண்ணியா பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர் களை வேறு இடங்களுக்கு இடமாற்றுவதற்கான பெயர்ப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கான இந்த இடமாற்றம் முதலாம் தவணைக்கிடையில் அமுல்படுத்தப்படுமென்று வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் துருவம் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
இப்பெயர் பட்டியல் கிண்ணியா, குறிஞ்சங்கேணி, முள்ளிப் பொத்தானை ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது முறைகேடுகள் அல்லது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் தமக்குத் தெரிவிக்கமுடியுமென வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment