Tuesday, November 01, 2011

இளையராஜாவின் மனைவி காலமானார்


தமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்று இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜா மனைவி ஜீவாவிற்கு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.  உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த ம்ருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இசையமைப்பதற்காக ஹைதராபாத் சென்று இருந்த இளையராஜாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று காலை சென்னை வருவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளையராஜா பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஆனந்தக் கும்மி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மறைவுக்கு தமிழ் திரையுலகம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment