சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் 2012ஆம் வருடத்துக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இலங்கையின் சகல பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேளலவி கற்கை நெறிக்கான போதனையுடன் கணனி, க.பொ.த. (சாதாரண தரம்), க.பொ.த (உயர்தரம்) போன்ற பரீட்சைக்கு தோற்றக்கூடிய வகையில் பாடத்திட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் விண்ணப்பபடிவங்கள் அனைத்தும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் காரியாலயத்தில் பெற்று எதிர் வரும் 2011.12.23 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்களின் அடிப்படை தகைமைகளாக அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல், 2011ஆம் ஆண்டில் 08ஆம் வகுப்பு சித்தியடைந்திருத்தல், நல்லொழுக்கமும், உடல் ஆரோக்கியமுள்ளவராகவும் இருத்தல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக அல்குர்ஆனை மனம் செய்தவர்களுக்கும், க.பொ.த. (சாதாரணதரம்) உள்ளவர்களுக்கும், தஃவாப் பணியில் ஆர்வமுள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் நேர்முகப்பரீட்சையில் சித்தியடைபவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
நேர்முகப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 24,25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு அதிபர்/தலைவர், தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி, சம்மாந்துறை என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். மேலதிக தொடர்புகளுக்கு 067 2260033, 067 2261194.

0 comments:
Post a Comment