Thursday, November 24, 2011

பொதுசன உதவித்தொகை அதிகரிப்பு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 

சமூக சேவைகள் திணைக்களத்தினுடாக விதவைகள், அனாதைகள், அங்கவீனர்கள் மற்றும் வயோதிப குடும்பங்களுக்காக வழங்கப்பட்டு வந்த மாதாந்த பொதுசன உதவித்தொகை அரசாங்கத்தின் புதிய சுற்று நிருபத்துக்கு அமைவாக கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வழங்கப்பட்டுவந்த 100 ரூபா 250 ரூபாவாகவும், 120 ரூபா 300 ரூபாவாகவும், 150 ரூபா 350 ரூபாவாகவும், 180 ரூபா 400 ரூபாவாகவும் 210 ரூபா 450 ரூபாவாகவும், 250 ரூபா 500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுசன உதவித்தொகை சகல தபால் மற்றும் உப தபாலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment