(எம்.எம். ஜெஸ்மின்)
கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் நேற்று புதன்கிழமை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றி வைத்தியசாலை அத்தியட்சகர் ஏ.எல். நஸீரிடம் கேட்டு அறிந்துகொண்டார்.
இந்தக் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இவ்விஜயத்தின்போது பிரதி மேயருடன் ஆலோசனை சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment