Sunday, December 11, 2011

12 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

(கலாநெஞ்சன்)
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள்தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்கதெரிவித்துள்ளார் .இந்த ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலானமாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம்பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும்தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள்மேலதிகமாகத் தோற்றுகின்றனர்.

இதற்காக நாடு முழுவதும் 3 ஆயிரத்து 920 மத்திய நிலையங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன. நாளை ஆரம்பமாகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரபரீட்சைகள் எதிர்வரும் 21ம் திகதி நிறைவடையவுள்ளது.

0 comments:

Post a Comment