
(கலாநெஞ்சன்)
சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும், உள்நாட்டவர்களையும் கவரும் வகையில் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இலங்கையில் இரவு கார் ஓட்டப் பந்தயம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கொழும்பில் இரவு கார் ஓட்ட பந்தயம் கொழும்பு கோட்டை பகுதியில் இந்த கார் ஓட்டப் பந்தயம் இடம்பெறவுள்ளது.
இந்த ஓட்டப்பந்தயத்தில் பிரபல்யம் வாய்ந்த கார் வகைகள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கையின் புகழ்பெற்ற கார் பந்தய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இந்த போட்டி இடம்பெறும் காலப்பகுதியில் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை கொழும்பு கோட்டை பகுதி வீதி மூடப்படவுள்ளதாகவும், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனவும் மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment