Thursday, December 15, 2011

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு சுருண்டது

செஞ்சுரியன் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர், ஸ்டைன் "வேகத்தில்' திணறிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று செஞ்சுரியனில் துவங்கியது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் "பீல்டிங்' தேர்வு செய்தார்.

பிலாண்டர் அசத்தல்: முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி பரணவிதனா (32), சங்ககரா (1), சமரவீரா (36), மாத்யூஸ் (38), கவுஷல் சில்வா (0) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பிலாண்டர் "வேகத்தில்' வீழ்ந்தனர். தில்ஷன் (6), ஜெயவர்தனா (30), வெலகேதரா (14), பெர்ணான்டோ (0) ஆகியோர் ஸ்டைன் பந்துவீச்சில் வெளியேறினர். இதையடுத்து இலங்கை அணி, முதல் இன்னிங்சில், 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிலாண்டர் 5, ஸ்டைன் 4 விக்கெட் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment