
(கலாநெஞ்சன்)
வலது குறைந்த பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 5 வருட கால கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். வத்தளை, ஹேக்கித்த அல்விஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கே சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
2008 பெப்ரவரி 15ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் ஹேக்கித்த பிரதேசத்தில் வைத்து 46 வயதுடைய பிரமித்தா போலிகே செனவிரத்ன என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பிரதிவாதிமீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் வலது குறைந்த திருமணமான பெண்ணாவார். பிரதிவாதி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியுள்ள நிலையில், இவ்வதந்திகளை பரப்பிய சம்பவம் தொடர்பாக பிரதிவாதி குறித்த பெண்மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனையடுத்து கோபமடைந்த பிரதிவாதி அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment