(எஸ்.எல். மன்சூர்)
கடந்த 2004ஆம் ஆண்டு இதே தினத்தில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலஅதிர்வின் காரணமாக சுனாமி பேரலைகள் தோன்றி இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளை தாக்கின. இதன் விளைவாக கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல கரையோர மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் பேர் இறந்தும் போயினர்.
இதனை நினைவுகூறும் முகமாக இன்று காத்தான்குடியில் தேசிய பாதுகாப்பு தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 9.25 இலிருந்து 9.27வரை இறந்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவாக அஞ்சலி செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டின் இதர பகுதிகளிலும் இறந்தவர்களின் நினைவாக அவர்களின் நினைவுச் சின்னங்களில் தங்களது உறவுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 comments:
Post a Comment