Sunday, December 18, 2011

கையடக்கத் தொலைபேசிகளை திருடிய நபர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது


(கலாநெஞ்சன்) 
பஸ்களில் செல்லும் பெண்களின் கைப்பைகளிலிருந்து கையடக்க தொலைபேசிகளை திருடி வந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு  பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கைது செய்யப்பட்டவராவார். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பஸ்களில் பயணம் செய்து பாடசாலை ஆசிரியைகள் மற்றும் தொழிலுக்கு செல்லும் பெண்களின் கைப்பைகளிலுள்ள செல்லிடப் பேசிகளை சூட்சுமமான முறையில் திருடி வந்துள்ளார். நீர்கொழும்பு, கட்டானை, கட்டுநாயக்க போன்ற பிரதேசங்களில் இத்திருட்டு செயலை அவர் புரிந்துள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரியதர்சன தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட செல்லிடப் பேசிகளையும் கைப்பற்றியுள்ளனா. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment