
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் செல்லும் புறத்தோட்டம் வீதி அகலமாக்கப்படாமல் குன்றும், குழியுமாகக் காணப்படுகின்றது. இப்பகுதி மக்கள் பலமுறை அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழை காலத்தில் இப்பாதை குளமாகக் காட்சியளிப்பதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இனிமேலாவது பிரதேசசபை இப் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமா?
0 comments:
Post a Comment