
(கலாநெஞ்சன்)
2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படுமென உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2011 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம் வெளியிடப்பட மாட்டாது எனவும் இஸட் புள்ளிகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை அறிவிக்காமையே இதற்கு காரணம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேற்று தெரிவித்திருந்தார்..
புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் தொடர்பான இஸட்புள்ளி விவகாரம் தொடர்பான தமது முடிவை அறிவிக்குமாறு 3 மாதங்களுக்கு முன்னர் தான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தான் கூறியிருந்ததாகவும் ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை எனவும் என பரீட்சைகள் ஆணையாளர்நேற்று
குறிப்பிட்டுள்ளார்..
இந்நிலையிலேயே, பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படுமென உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment