Tuesday, December 13, 2011

மலசல கூடங்களைப் பெற்றுத் தருமாறு புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்


(புத்தளம் செய்தியாளர்) 
புத்தளத்திலுள்ள உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி திட்ட காரியாலத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்று வருகின்றது. உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ள மலசல கூடங்களை இடம் பெயர்ந்த மக்களுக்கு மாத்திமன்றி புத்தளம் மக்களுக்கும் பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் புத்தளம் நகரசபை உறுப்பினர் டீ.எம். முஜாஹிதுல்லாஹ் தலைமையில் இடம் பெறுகின்றது.

உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கி்டைக்கப்பெற்ற 2000 மலசல கூடங்களில் புத்தளம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புத்தளம் நகரசபை உறுப்பினர் டீ.எம். முஜாஹிதுல்லாஹ் தெரிவித்தார்.

திட்டப் பணிப்பாளர் எஸ்.எம்.யாஸீனிடம் இது தொடர்பாக வினவிய போது, உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கி்டைக்கப்பெற்ற 2000 மலசல கூடங்களில் 798 மலசல கூடங்கள் புத்தளம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 



0 comments:

Post a Comment