(பஹமுன அஸாம்)
கொட்டாவையில் இருந்து பின்னதுவை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்த வருட இறுதிக்குள் மாத்தறை கொடகம வரை நீடிக்கப்படு மென துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது அதிவே நெடுஞ்சாலை கொழும்பு கொட்டாவையில் இருந்து மாத்தறை கொடகம வரையில் நிர்மானிக்கத் திட்டம் போட்டிருந்த போதும், நிர்மாணப் பணிகள் பாலி பின்னதுவ வரையிலேயே பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 27ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. சில குறைபாடுகளால் தடைப்பட்ட பின்னதுவையில் இருந்து கொடகம வரையிலான 30 கிலோ மீற்றர் தூரத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருவதோடு அடுத்த வருட இருதிக்குள் அதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

0 comments:
Post a Comment