
பப்ளிசிட்டிக்கு என்ன செய்யலாம் எண்டு என்கிட்டே கேட்டா, தலைகீழா நடக்கச் சொல்லுவேன். நம்மட சனங்கள் எதையும் புதுசாத்தான் பார்க்க விரும்புது. அரசாங்கமும் அதத்தான் அறிமுகப்படுத்த முயற்சிக்குது. ஆனா ஒண்டு பாருங்கோ, யாருக்கும் நல்லது சொல்ல ஏலாது இந்த காலத்தில. நல்ல விசயத்த சொன்னா உடனே கொடிய தூக்கிட்டு ஆர்ப்பாட்டம் எண்டு கிளம்பிடுறாங்க.
உலகத்துலேயே ஈசியான விஷயம் என்ன தெரியுமா? மத்தவங்கள குறை சொல்லுறதும், குத்தம் கண்டு பிடிக்கிறதும்தான். இதைதான் தமிழ் கூட்டமைப்பும் செய்யுது. அங்கயும் இங்கயும் போய் அரசாங்கத்தப் பத்தி குத்தம் சொல்லுறதுதான் இவங்கட வேலையே. கூட்டமைப்பு எண்டைக்காவது ஒரு விசயத்த நல்லா சொல்லி இருக்கா அல்லது போதும் எண்டு என்டைக்காவது திருப்திப்பட்டு இருக்கா...? UNP ஆட்சிக்கு வந்தாலும் கூட்டமைப்பு பழைய பல்லவியத்தான் பாடப்போகுது. இதுக்குள்ள காங்கிரசோட கூட்டு வேற சேரப் போறாங்கலாம். எங்க போயி முடியப் போகுதோ?
இப்ப உள்ள காலத்துல அரசை எதிர்த்து ஒண்டும் செய்ய முடியாது. பேசாம நாலு சனத்துக்கு நல்லது செய்யப் பாருங்கோ. சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும். இப்பவே மக்களுக்கு ஏதும் நல்லதை செஞ்சி புண்ணியத்த தேடப் பாருங்கோ. அத விட்டுட்டு பட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னா, இப்படியே ஆயிசை கழிக்க வேண்டியதுதான்.
முதல்ல உங்களை நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள் ஐயா!!!
- மண்டு வாத்தியார்
- மண்டு வாத்தியார்
0 comments:
Post a Comment