Sunday, December 25, 2011

இணையத்தளத்தில் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன


(கலாநெஞ்சன், எஸ்.எல்.மன்சூர்) 
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் http://www.doenets.lk/exam/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகளை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும். வெளிமாவட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸட் ஸ்கோர் முறையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக முடிவுகளை வெளியிடுவதில் தாமம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் துரித நடவடிக்கையினால் பரீட்சைத் திணைக்களம் துரிமாக இயங்கியே இந்தப் பரீட்சையின் முடிவுகளை வெளியிட முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இப்பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து சந்தேசகங்களை ஆசிரியர் சங்கங்கள் எழுப்பியுள்ளன. இது மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment