Friday, December 30, 2011

விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி

(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் அனுசரனையுடன் சம்மாந்துறை விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் யூ.எம்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பைஷால் அமீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment