பாகிஸ்தானின் ஷாம்சி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் 5 ஆளில்லா உளவு விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தை பயங்கரவாதிகளுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து ஷாம்சி விமான தளத்திலிருந்து டிசம்பர் 11ம் திகதிக்குள் வெளியேறிவிடுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதையடுத்து அங்கிருந்து அமெரிக்க விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விமான நிலையத்தை பாகிஸ்தானிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் விமான நிலைய கட்டுப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:
Post a Comment