Thursday, December 22, 2011

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் நத்தார் தினக் கொண்டாட்டம்


(கலாநெஞ்சன்) 
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நத்தார் தினக் கொண்டாட்டம் நேற்று முற்பகல் சிறைச்சலை வளவில் இடம்பெற்றது. இதனை சிறைச்சாலை கைதிகள் நலன் புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது கைதிகள் பங்குபற்றிய கரோல் கீதம், நத்தார் நாடகம் என்பன அங்கு இடம் பெற்றன.

அருட்கோதரர்கள், அருட்கோதரிகள், கைதிகள் நலன் புரிச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நீர்கொழும்பு ஸ்டெபன் தேவலய பாடகியர் குழுவினர் இந்நிகழ்வில் கரோல் கீதம் இசைத்தமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment