(ஏ.ஜே.எம்.ஹனீபா)
மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் ஞாபகாத்தமாக சம்மாந்துறை சுவாட் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் விசேட துஆப்பிராத்தனையும் நடைபெற்றது.
சுவாட் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.ஏ.சீ. யூசூப்லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் மூத்த புதல்வர் ஜலாலுதீன் பாறுக்கி, முஹம்மட் நாஸர், மருமகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், மற்றும் அவருடைய உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு அல் மத்ரஸதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரி மாணவர்களினால் அல் குர்ஆன் தமாம் செய்யப்பட்டதுடன் அல் ஹாபில் மௌலவி ஹச்சு முஹம்மட் அவர்களினால் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டு மௌலவி அதிபர் கே.எம்.கே.றம்ஸீன் காரியப்பர் அவர்களினால் துஆப் பிராத்தனை நடத்தப்பட்டது.
0 comments:
Post a Comment