Thursday, December 08, 2011

‘TOUR DE SRILANKA YOUH’ முதலாவது நாள் போட்டி நிறைவு


டுவர் டீ ஸ்ரீலங்கா யுத் தேசிய சைக்கிளோட்ட போட்டியின் ரேசிங் போட்டியின் முதலாவது நாள் போட்டி புதிய இலங்கை சாதனையுடன் நேற்று சியம்பலாண்டுவை நகரில் நிறைவு பெற்றது. மட்டக்களப்பு பொதுநூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

முதல் நாளில் இடம்பெற்ற ரேசிங், ஸ்டேன்டட் போட்டியில் இலங்கை இராணுவ வீரர் 6 பேர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டனர். ரேசிங் போட்டியில் 124.4 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணித்தியாலம் 53 நிமிடத்தில் ஓடி முடித்து புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினர் 

இதேவேளை ஸ்டேன்டட் போட்டியில் முதல் 3 இடங்களை முறையே சந்தன, ருவன் ஜயமல்ல, மீமனகே ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரேசிங் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை சியம்பலாண்டுவையில் வைத்து ஆரம்பமாகும்.

மூன்றாவது நாள் போட்டி 10ஆம் திகதி திஸ்ஸமஹராமயில் வைத்து ஆரம்பமாகி மாத்தறையில் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment