Monday, December 05, 2011

UNP தலைவர் பதவிக்கு கருஜயசூரிய தயார்


(கலாநெஞ்சன்) 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட தான் தயார் என அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை விடுத்து கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு தனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன என்றும், அவற்றை நான் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கரு ஜயசூரிய தனது விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தான் விடுத்துள்ள இந்த அறிவித்தல் மூலம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என தானும் தனது ஆதரவாளர்களும் அறிவோம் என்றும், ஆனாலும் எவ்வித ரச்சினைகளுக்கும் தனது ஆதரவாளர்கள் முகங்கொடுக்க நேரிட்டாலும் தான் வர்களுடன் இருப்தாகவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றவும் ஐக்கியப்படுத்தவுமே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், பதவிகளுக்கு அப்பால் தான் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிப்பதாகவும்,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிர்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நேற்று உத்தியோகபூர்மாக கோரிக்கை விடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இதேவேளை, கரு ஜயசூரியவின் இந்த முடிவை அடுத்து கட்சியின் ஆதரவாளர்களும்,செயற்பாட்டாளர்களும்.கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment