Monday, January 09, 2012

சருமத்தை பாதுகாக்கும் பக்டீரியா கிரீம்


சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க புதிய சன் ஸ்கீரிம் லோசன் ஒன்றை பக்டீரியாவில் இருந்து தயாரித்துள்ளனர். இந்த கிரீம் அதிக வெப்பத்தை தாங்கி சருமத்தை பாதுகாக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சூரிய வெப்பம் அனைவருக்குமே ஒத்துக் கொள்வதில்லை. சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் தாக்குவதால் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கவும், பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் சன் ஸ்கிரீன் லோசன் தடவிக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு சில லோசன்கள் சருமத்தையே பதம் பார்த்து விடும்.

இந்த நிலையில் அலர்ஜி ஏற்படுத்தாத கிரீம் தயாரிப்பது தொடர்பாக ஸ்வீடனின் கோதன்பெர்க் மற்றும் சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். வெப்ப பகுதிகளில் மட்டுமே வாழும் சியானோ பக்டீரியா என்ற பக்டீரியாவி உள்ள ஸ்கைடோனியம் என்ற மூலப்பொருள் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பளிப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பக்டீரியாவில் இருந்த சரும பாதுகாப்பு கிரீமை உருவாக்கியுள்ளனர்.

இது அதிக வெப்பத்தை தாங்கி, சருமத்தை பாதுகாப்பது முதல்கட்ட சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத கிரீம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment