
பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சன்னி லியோன் அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்தவர் என்பதற்காக அவரை ஒதுக்கி வைக்க கூடாது என்று பத்திரிகை கவுன்சில் தலைவரான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகையான சன் னி லியோன் கலந்து கொண்டார்.
இவர் 30க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்தவர். மேலும் 25 ஆபாச படங்களையும் இயக்கி உள்ளார். தன்னுடைய ஆபாச போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளுக்காக தனியாக ஒரு இணைய தளமும் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொ டர்பாக மத்திய அரசுக்கு பல புகார்கள் குவிந்தது. இந்த புகார்களின் நகல்களை பத்திரிகை கவுன்சிலுக்கு மத்திய அரசு அனுப்பியது.
இது தொடர்பாக நீதிபதி கட்ஜு வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகை சன்னி லியோன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் சம்பாதிக்கிறார். இது இந்தியாவில் குற்றமாக இருந்தாலும், அமெரிக்க சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில் ஆபாச படங்களில் நடிக்கிறார், அல்லது அந்த படங்களை விற்பதன் மூலம் சம்பாதிக்கிறார் என்று எந்த புகாரும் வரவில்லை. இந்தியாவின் சமூக ஒழுக்க நெறிமுறைகளை சன்னி லியோன் மீறாமல் இருக்கும்வரை அவரை ஒதுக்கிவைக்க தேவையில்லை. இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment