
யுத்தம் நடந்திட்டு இருக்கேக்க அபிவிருத்தியும் நடந்த நாடு எண்டா அது நம்ம இலங்கை நாடுதான். இப்ப அதிகாரத்துல இரிக்கிற மகிந்த ராஜபக்ஷ புதுப்புது அபிவிருத்தியை கொண்டுவாறது நம்மளுக்குத்தான் நல்லது. இதுக்கு பலத்த ஆதரவு இருந்தாலும், கரைஞ்சிபோன கட்சிகள் சில இதுல எப்பவும் குத்தம் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. அவங்களுக்கு குத்தம் கண்டு பிடிக்கிறதுக்குத்தான் சம்பளம் குடுக்கிறாங்களாக்கும். அவங்கட பிரச்சினைகள சொல்லவும் தேவையில்ல. அவங்கட கட்சிக் காரங்களே வெளியில சொல்லிவிடுவாங்க.
இதுவரைக்கும் இல்லாத ஸ்பீடான றோடு, பெரிய கலையரங்கம் அத்தோட ஆசியாவுல பெரிய டவர் ஒண்டும் கொழும்புல அடிக்கப்போறாங்களாம். அபிவிருத்தி அடஞ்சிவரும் நாடுகளின்ட பட்டியல்ல இலங்கை நாலாம் இடத்துல இருக்காம். ஒருகாலத்துல ஆசியாவுலேயே ஆச்சரியமான நாடா இலங்கை வரும் எண்டது இப்ப உண்மையாகிட்டு வருது.
மண்டு வாத்தியாருக்கு நல்லதும் தெரியும், கெட்டதும் தெரியும். நல்லது எண்டா சப்போட் பண்ணுவான், கெட்டது எண்டா தட்டிக் கேட்பான். அதுதான் மண்டு.
0 comments:
Post a Comment